அதிமுக பூத் கமிட்டி முகவர் தேர்வு: நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜு ஆலோசனை
![அதிமுக பூத் கமிட்டி முகவர் தேர்வு: நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜு ஆலோசனை](https://tn96news.com/wp-content/uploads/2025/01/6c22b045-51bd-49d6-9bf7-f9256174f8cc-850x560.jpeg)
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில், நகரச் செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலையில் பூத் கமிட்டி முகவர் தேர்ந்தெடுக்கப்படவும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன்,மத்தியஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி,ஜெ பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமணப்பெருமாள்,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,அதிமுக நிர்வாகிகள் இந்திரன்,மாரிமுத்து பழனிச்சாமி,சாத்தூரப்பன்,கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)