2025 புத்தாண்டு பிறந்தது; கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு வெளியேயும் நீண்ட வரிசை காணப்பட்டது,.


2024 ஆம் ஆண்டு முடிந்து நேற்று 2025 ஆம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவிலேயே தொடங்கி விட்டது.
நள்ளிரவு 12 மணி ஆனதும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டன்ர். வாட்சப் வாழ்த்து செய்திகள் அனுப்பி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புத்தாண்டு சிறப்பு கொண்டாடட்ட நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன,
நேற்று காலையில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தொடர்ந்து 5.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஆண்டின் தொடக்க நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகம் கூடியதால், வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வெளியேயும் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேபோல் கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலிலும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளானோர் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் உள்ள விக்ன விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக விக்ன விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு சக்தி முருகேசன் சார்பில் 5 வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டது
கோவில்பட்டியில் உள்ள மற்ற கோவில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் ஆங்கிலப் பத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த வன்னி விநாயகரை அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி கோவில்பட்டியில் இருந்து சென்றும் நிறைய பேர் தரிசித்தனர்.
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், அலமேலு மங்கா- பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலார் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமணன் செய்திருந்தனர்,







