மாவீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் : மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு நாளையொட்டி, எல்லையை பாதுகாக்க போராடிய தியாகிகளை வணங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1-ம் நாள், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
“தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர்-1., தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய அனைவரையும் எல்லை போராட்ட தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.