புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்தினம் விடுமுறை

 புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்தினம் விடுமுறை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி புதன்கிழமை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது பணி துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 30-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 16-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ம் தேதி ஏற்கெனவே அரசு விடுமுறை அளித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *