ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

 ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் (போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், கருணை உள்ளத்தோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *