• June 8, 2025

வெளியானது “அச்சமில்லை அச்சமில்லை” என தொடங்கும் அமரன் படத்தின் டிரெய்லர்

 வெளியானது “அச்சமில்லை அச்சமில்லை” என தொடங்கும் அமரன் படத்தின் டிரெய்லர்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

‘அமரன்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும். மேலும் இப்படத்தின் டிரெய்லரை பான் இந்தியா நட்சத்திர நடிகர்களான., தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் டோவினோ தாமஸ், தெலுங்கில் நானி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ் குமார் ஆகியோர் வெளியிடுகின்றனர் என படகுழு அறிவித்தது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படகுழு தனது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ளது. “அச்சமில்லை அச்சமில்லை” என தொடங்கி 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் அமரன் பட டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது படத்தின் மீதான கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *