இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்று அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து அணி வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி நியூசிலாந்து அணியில், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, லோக்கி பெர்குசன், சாக் போல்க்ஸ், டீன் பாக்ஸ்கிராப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
