வெளியானது ‘டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் கதாநாயகனாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. தற்போது பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டிராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
