• June 8, 2025

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா

 நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா

சமீபத்தில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி டி-20 போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 16-ம் தேதி பெங்களூரிலும், அடுத்து 24-ம் தேதி புனேவிலும், கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ம் தேதி மும்பையிலும் துவங்கி நடைபெறும். இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சுலபமாக முன்னேற முடியும் என்பதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இடம்பெற்றிருந்த யாஷ் தயாளுக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டதால் அவரை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கியுள்ளனர். மற்றபடி வங்கதேச டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற இந்திய அணியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகம் பேசப்படும் விஷயமாக ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது தான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என்ற செய்தி கடந்த சில நாள்களாக பேசப்பட்டுவருகிறது. அப்படி நடந்தால் யார் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வி வந்த நிலையில் இப்போது பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது அதற்கு பதில் கொடுத்திருக்கிறது. பும்ரா ஏற்கெனவே இந்தியாவை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வழிநடத்தியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பரீத் பும்ரா (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பரஸ் கான், ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

ரிசர்வ் வீரர்கள்: ஹர்ஷித் ரானா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *