• October 22, 2026

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்துக்கு எதிரான 3-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டாம் ப்ளெண்டல்(விக்கெட் கீப்பர்), மார்க் சாம்ப்மென்,டெவான் கான்வே,மேட் ஹென்றி,டேரில் மிட்செல்,வில் ஓ ரூர்க்,அஜாஸ் படேல்,க்ளென் பிலிப்ஸ்,ரச்சின் ரவீந்திரா,மிட்செல் சாண்ட்னெர்,பென் சீயர்ஸ்,டிம் சவுதி,கேன் வில்லியம்சன்,வில் யங்,மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட்க்கு மட்டும்), இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட்க்கு மட்டும்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16 முதல் 20 வரையிலான தேதிகளில் பெங்களூருவிலும்.,2-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 முதல் 28 வரையிலான தேதிகளில் புனேவிலும்.,3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 முதல் 5 வரையிலான தேதிகளில் மும்பையிலும் நடைபெற உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *