தேசிய ஆக்கி போட்டிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் தேர்வு
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது இந்த ஆண்டுக்கு 14 வயதுக்குட்பட்டவருக்கான தமிழக ஆக்கி அணி தேர்வு ஓசூரில் நடைபெற்றது இதில் கோல் கீப்பராக ஜெகதீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான அணி தேர்வு ராமநாதபுரத்தில் நடைபெற்றது இதில் தடுப்பு ஆட்டக்காரராக தனுஷ் பாண்டியன் தேர்வானார். இவர்கள் இருவரும் கோவில்பட்டி ராஜீவ்காநதி விளையாட்டு கழக வீரர்கள் ஆவர்,
தேசிய போட்டியில் கலந்துகொண்டு தமிழக அணிக்காக விளையாட உள்ள இரு வீரர்களையும் பாராட்டும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, ராஜீவ்காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் முருகன், வேல்முருகன், முகேஷ் குமார், ஜெகதீஷ்வரன், முன்னாள் இந்திய ஆட்டக்காரர் அஸ்வின், முன்னாள் தேசிய ஹாக்கி வீரர்கள் காளிதாஸ், தனசேகரன், சுரேஷ்குமார், சரவணகுமார், ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர்