தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு தினமும் அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகள்

 தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு தினமும் அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகள்

தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா கடந்த .3ம் தேதி தொடங்கியது வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் தினமும் அழைத்துவரப்படுகின்றனர். 

ஒரே நேரத்தில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் குவிந்து வருவதால் அரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மாணவா்களை ஒழுங்குபடுத்தி அரங்குக்குள் அழைத்துச் செல்வதில் சரியான திட்டமிடுதல் இல்லாததால், அதிக நேரம் அவா்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தசரா விழா நடந்து வருகிறது. முத்தாரம்மன் கோவிலுக்கு மாணவ, மாணவிகள் பலர் விரதம் கடைபிடிப்பதால் காலணி அணிவதில்லை. இதனால் சட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதவிர, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைந்த அளவில் இருந்ததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி புத்தகத் திருவிழாவில் அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். சரியான திட்டமிடல் மற்றும் கால அட்டணை போட்டு பள்ளி மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *