கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலைக்குன்றை பாதுகாக்ககோரி  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மனு

 கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலைக்குன்றை பாதுகாக்ககோரி  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மனு

கோவில்பட்டியின் மிக முக்கிய அடையாளம் சொர்ணமலை கதிரேசன் கோவில் மலைக்குன்று… திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வரும் போது கோவில்பட்டி நகர்  வரவேற்கும் விதமாக இந்த் மலைக்குன்று வெகு தூரதில்லேயே தெரியும்.

இந்த் மலைக்குன்றில் உள்ள கோவிலில் வேல் வடிவத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது./ இங்கு தினமும் பூஜைகள்  நடப்பதுடன் மதிய உணவும் பரிமாறப்படுகிறது.

முன்பு கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மட்டும் இருந்தன. மலைக்குன்றுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் தார்ச்சாலை அமைக்கபப்ட்டு இருக்கிறது. மலை அடிவாரத்தில் நிறைய குடியிருப்புகள் உருவாகி தனி ஊர் போல் காட்சி அளிக்கிறது.  இக்கோவில் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள நிலங்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும்  மலைக்குன்றில் இருந்து சரளைமண், கற்கள் எடுக்கப் மலைக்குன்றில் வெடிவைத்து தகர்க்கப்பட்டு, லாரிகளில் கடத்திச் செல்லப்படுகின்றன.

இதனால், கதிரேசன் கோவில் மலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டினர்.,  கனிம வளங்கள் களவாடப்பட்டு வந்த நிலையில்  தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது,

தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி, தமிழக சுற்றுச்சூழல், வருவாய்த் துறை செயலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர்,  இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், தமிழ்நாடு மாக கட்டுப் பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.என்று உத்தரவிட்டுள்ளனர்  இது தொடர்பான வழக்கு விசாரணை  நவம்பர் 4 ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மனு

இந்த நிலையில் கதிரேசன்கோவில் மலையை பாதுகாத்திட வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்டியு,சி, ராஜசேகரன், பகத்சிங் ரத்ததான கழக காளிதாஸ், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை சாய்குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார்,  ஜெகநாதன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகபாண்டியன் உள்ள்ளிட்டவர்கள் சென்று மனு அளித்தனர்,. அவர்கள் வழங்கிய மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மனுவில் சொர்ணமலை முருகன்கோவில் மற்றும் கோவில் அமைந்துள்ள மலை பகுதியில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இப்பகுதியில் சரள் மண், கல் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.  மலையை  சுற்றியுள்ள எல்லைக்கோடு அறியப்பட்டு அதை சுற்றிலும் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும்.

மலையின் பூகோள இருப்பு மற்றும் இயற்கை வளம் மாறாமல் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்தபடி சொர்ணமலை முருகன்கோவில் சுற்றுலா தலமாக செயல்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, கனிமவள பாதுகாப்புத்துறை, காவல்துறை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களை கொண்ட கூட்டுக் கூட்டம் நடத்தி மேலேகண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *