காங்கிரஸ் சார்பில் காமராஜர் நினைவு தின பேரணி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் தேசப்பிதா காந்தியடிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து முன்பு இருந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபம் வரை அமைதி பேரணி நேற்று நடைபெற்றது
பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் துரைராஜ்,ஐஎன்டியூசி ராஜசேகரன், மாவட்ட பொறுப்பாளர்கள் பிரேம்குமார், மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில், வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் காமராஜ் பேரணியை தொடக்கி வைத்தார்,
பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல் ஞனதுரை, உமாசங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், ஊடக பிரிவு ராஜசேகரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகராஜா,பழனிசாமி,எப்போதும் வென்றான் ஆறுமுகசாமி, அய்யதுரை, அருணாச்சலம்,விவசாய பிரிவு பேரையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்