கோவில்பட்டியில் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனை: படைவீரர்கள், வீரமங்கையர் அமைப்பு வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படைவீரர்கள் வீரமங்கையர் அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கேசவராஜன் தலைமை தாங்கினார். சங்கத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடந்தது.
சங்கத்தின் தலைவராக கோவில்பட்டி கேசவராஜன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக தர்மபுரி நடராஜன், தேனி வெங்கடேசன், குடியாத்தம் முனியசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுபேதார் மேஜர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், கோவில்பட்டியில் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும். ராணுவத்தினருக்கான மருத்துவமனை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும். தேனி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கேந்திரா வித்யாலயா பள்ளிகள் நிறுவ வேண்டும். முன்னாள் ராணுவ விதவையர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வீட்டு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.