• June 7, 2025

27ம் தேதி ரிலீஸ் ஆகும்  `மெய்யழகன்’ டிரெய்லர் வெளியீடு

 27ம் தேதி ரிலீஸ் ஆகும்  `மெய்யழகன்’ டிரெய்லர் வெளியீடு

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், ‘நான் போகிறேன்’ மற்றும் ‘யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

படத்தின் டீசரை தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திலிருந்து டெல்டா கல்யாணம் எனும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் குறித்த பதிவை நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *