விடுதலை போராட்ட வீரர் வ.உ.சி பிறந்தநாள் விழா கருத்தரங்கம்


கோவில்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சவுபாக்யா மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் என்.டி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்..ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன், மாவட்ட துணைசெயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிருஸ்டோபர் வரவேற்று பேசினார். வ.உ.சிதம்பரனார் உருவப்படத்தை அவரது கொள்ளுப்பேத்தி தலைமை ஆசிரியை செல்வி திறந்து வைத்தார்,மதிமுக மாநிலபொருளாளர் செந்திலதிபன், துணை பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
வ.உ.சி பிறந்த நாள் குறித்து கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
ரத்ததானம், கண்தானம், மரக்கன்று நடுதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை செய்துவரும் சமூக சேவகர்களுக்கு அறிஞர் சங்கரவள்ளிநாயகம் நினைவு விருது வழங்கப்பட்டது.
மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
விழாவில் மதிமுக நிர்வாகிகள் முத்துச்செல்வம், பால்ராஜ்,சரவணன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பவுன் மாரியப்பன், கொம்பையா மற்றும் இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தை சார்ந்த சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், சாய்குமார், மேரிஷீலா,ரோட்டரி சங்கம் எம்.எஸ்.எஸ்.வி. பாபு, புனித ஓம் பள்ளிகளின் தாளாளர் லட்சுமணபெருமாள் உளபட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதிமுக மாவட்ட துணை செயலாளர் தெய்வேந்திரன் நன்றி கூறினார்.
