• June 7, 2025

தாம்பரம்-கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்

 தாம்பரம்-கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 “தாம்பரத்தில் இருந்து வருகிற 6-, 8-, 13-, 15-, 20-, 22-ம் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06035) திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

அதுபோல் மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வருகிற 7, 9, 14-, 16, 21, 23 ம்தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) மாலை 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06036) மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 14 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *