• June 7, 2025

தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு நாளை நடக்கிறது

 தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு நாளை நடக்கிறது

புதுக்கோட்டையில் வருகிற  7ஆம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு  விளையாட உள்ளது. இதையொட்டி  தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நாளை 3.9.2024 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வில்  கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கான தகுதிகள்  

1.1.2005க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியிலோ, கல்லூரியிலோ பயின்று வருபவராக இருக்க வேண்டும் தகுதயுள்ள வீராங்கனைகள், தங்களது ஆதார் சான்றிதழ்  மற்றும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும் என்று ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் சி..குரு சித்ர சண்முக பாரதி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு 9443190781 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *