ஆரா விஸ்வாஸ் அகாடமி, தாமரை நாட்டியாலயா இணைந்து நடத்திய பட்டமளிப்பு, விருது வழங்கும் விழா


கோவில்பட்டி தாமரை மஹாலில் கழுகுமலை ஆரா விஸ்வாஸ் அகாடமி மற்றும் தாமரை நாட்டியாலயா இணைந்து குரு சமர்பணம் – டேலண்டீனா -2024, என்ற அபாகஸ், வேத கணிதம் , நாட்டிய திறனை வெளிப்படுத்தும் விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் , கடம்பூர் செ.ராஜு தீபச்சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார், லயன்ஸ் கிளப் ஆஃப் டைனமிக் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் , ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக அபாகஸ், வேதிக் மேக்ஸ் பட்டமளிப்பு விழா, இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் விருது, ஆசிரியர், பெற்றோர்களுக்கான விருதும் , மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
ராபா உலக சாதனை மையம் மற்றும் ராபா மீடியா, சென்னை சார்பில் முன்னாள் அமைச்சா் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினா் கடம்பூா் செ ராஜூ வுக்கு “மக்கள் நாயகன்” விருது வழங்கப்பட்டது.
ஆசியாபார்ம்ஸ் பாபுவுக்கு ” கிரவுண்ட் நட் குரு” விருது. ஜெயஸ்ரீக்கு ” `எக்ஸலன்ஸ் இன் லா , கல்வி’ விருது வழங்கப்பட்டது. கழுகுமலை செயின்ட் மெடோனாஸ் பள்ளி தாளாளர் மெடில்டா ஜவகர்- செயின்ட் மெடோனாஸ் , ஆரா விஸ்வாஸ் நிறுவனர் உமா வெங்கடேஸ்வரி , தாமரை நாட்டியாலயா நிறுவனர் , அமிர்தா கோபாலன் , தேவி ராஜாத்தி , பெரியசாமிபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி நிறுவனர் கோபால் ஆகியோருக்கு டாக்டர் .ராதாகிருஷ்ணன் நினைவு விருது வழங்கப்பட்டது , மவுண்ட் எல்பரஸ் உச்சியை தொட்ட கழுகுமலையை சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியனுக்கு இளம் சாகச வீரர் விருது வழங்கப்பட்டது.
விழா ஏற்படுகளை ஆரா விஸ்வாஸ் நிறுவனர் உமா வெங்கடேஸ்வரி தாமரை நாட்டியாலயா நிறுவனர் அமிர்தா கோபாலன் ஆகியோர் செய்து இருந்தனர்..







