இளையரசனேந்தலில் அதிகாரிகள் கவனம் ஈர்த்த சுவரொட்டிகள்
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு துறை அதிகாரிகள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீண்ட கால கோரிக்கையை சுவரொட்டியாக அச்சடித்து இளையரசனேந்தல் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது இருந்தது.
இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளில் “ தமிழக அரசே ! இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் தொடர்ந்திடவும், கோவில்பட்டி யூனியனுடன் இணைத்திடவும் உடனே நடவடிக்கை எடு! நெடுநாள் துயரத்தை துடைத்திடு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது,
இப்படிக்கு தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு என்று குறிப்பிடப்பட்டு, வக்கீல் எஸ்.ரெங்கநாயகலு, த. முருகன், பி.கோபாலகிருஷ்ணன், வி.கற்பூரராஜ், ஏ.கனகராஜ், கருப்பசாமி ஆகியோர் பெயர்கள் புகைப்படத்துடன் இடம்பெற்று இருந்தன.
குறிப்பிட்டபடி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.அவர்கள் பார்வையில் சுவரொட்டிகளும் தென்பட்டன.