தேசிய விளையாட்டான ஆக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும்- ஆட்சியர் க.இளம்பகவத்

 தேசிய விளையாட்டான ஆக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும்- ஆட்சியர் க.இளம்பகவத்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தூத்துக்குடி  தருவை விளையாட்டு மைதானத்தில் ஆக்கி விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். வீரர்களுக்கு ஆக்கி  = மட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்  கூறியதாவது:-

இந்த போட்டியில் 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அணிகள் தனிதனியாகப் போட்டியிடபோகிறீர்கள்.   ஆக்கி நமது நாட்டினுடைய தேசிய விளையாட்டு அந்த ஆக்கி விளையாட்டில் நமது நாட்டிற்கு இந்த ஆண்டு ஒரு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ஆக்கியென்றால் இந்தியாதான் என்ற ஒரு மரபை நாம் வைத்திருந்தோம். அது கொஞ்சகாலமாக  மறைந்து தற்போது மிக சிறப்பாக நமது ஆக்கி அணி தயாராகியுள்ளது.

நீங்கள் அனைவரும் நன்றாக இந்த போட்டிகளில் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கும், தேசிய அளவிலான போட்டிகளுக்கும் இறுதியில் ஒலிம்பிக் மாதிரியான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் நன்றாக விளையாட வேண்டும். தேசிய விளையாட்டான ஆக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர்  அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் விளையாட்டு வீரர் மற்றும் வீராகனைகள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *