• June 8, 2025

‘இந்தியன் 2’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது

 ‘இந்தியன் 2’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று   சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான மம்முட்டி நடிப்பில் கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியான படம் ‘டர்போ’. இதில் மம்முட்டியுடன், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.70 கோடி வசூலை பெற்றது. இன்று இப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் டிசம்பர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருந்ததால், ஸ்ட்ரீமிங் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.மத உணர்வுகளை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கினால் மட்டுமே இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று இந்தியாவைத்தவிர உலகம் முழுவதும் இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு சந்து சாம்பியன்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது. கபீர் கான் இயக்கிய இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று  வெளியாகியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *