வினேஷ் நீங்கள் உண்மையான சாம்பியன் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிபோட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று அவர் தகுதி நீக்கம் செய்யபப்ட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வினேஷ், நீங்கள் ‘அனைத்து வகையிலும்‘ உண்மையான சாம்பியன். உங்கள் மீளும் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டியை நோக்கிய குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
சில கிராம் எடையால் தகுதியிழந்தது, உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைத்து விடாது. நீங்கள் பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
