• June 9, 2025

போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

 போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடந்தது.கூட்டத்திற்குசங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கவுரவத்தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் துரைராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராமன், நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

தலைவராக கண்ணன், செயலாளராக ரெங்கராஜ், பொருளாளராக முத்துராஜ், துணைத் தலைவராக  ரவி, துணைச் செயலாளராக  சம்சுதீன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், சங்க வளர்ச்சிக்கான வழிமுறைகளை நிறைவேற்றவும், ஆண்டுக்கு 2 பயிற்சி வகுப்பு மற்றும் ஆண்டுக்கு ஒரு பொதுக்குழு கூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *