• October 25, 2026

மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தல் முகாம்

 மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தல் முகாம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் சஹாசங்கா  மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் 105 பேர் கலந்து கொண்டனர்.  தகுதி வாய்ந்த 76 பேர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு  முதன்மைமேலாளர்  மதுரைஅழகர் தலைமை தாங்கினார்.. வீரசோழன் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சாதிக் அலி, ஊராட்சி செயலாளர் முத்திருளாயி  ஆகியோர் முன்னிலை  வகித்தனர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நோபில் நர்கீஸ், வங்கி நடைமுறைகள், சேமிப்பு மற்றும்  காப்பீடு  பற்றி சிறப்புரையாற்றினார்.

வங்கி வணிக தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் காப்பீடு பதிவு செய்து அனைவரையும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தார். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கள ஒருங்கிணைப்பாளர்  தனலட்சுமி, பயிற்றுநர் சுகன்யா ஆகியோர் செய்து இருந்தனர்\.  நிகழ்ச்சியின் முடிவில்  பயிற்றுநர்  புஷ்பவள்ளி நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *