சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து சேதமடைந்தன.
அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அச்சங்குளம் ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடி மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை செல்வகுமார் (வயது 35) மற்றும் மோகன் (வயது 30) ஆகிய 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டதுடன் தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரஈவித்து உள்ளார்.