சென்னையில் ராகுல்காந்தி பிறந்தநாள், `கேக்’ வெட்டி கொண்டாட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராகுல்காந்தி எம்.பி.யின் 54 வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை கேக் வெட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் விஜய்வசந்த் எம்.பி, ஜே.எம்.ஹாரூண், துணைத்தலைவர்கள் சொர்ணாசேதுராமன், இதயத்துல்லா, டி.செல்வம், பி.வி.தமிழ்ச்செல்வன், எஸ்.கே.அகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
