• June 6, 2025

கோவில்பட்டி ஆக்கி: 18,19,20 -வது லீக் போட்டி முடிவுகள் 

 கோவில்பட்டி ஆக்கி: 18,19,20 -வது லீக் போட்டி முடிவுகள் 

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 5 வது நாளான இன்று (28ந் தேதி )மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும் மோதின.

இதில் 1:0 என்ற கோல் கணக்கில் மும்பை, யூனியன் பேங்க் அணி வெற்றி பெற்றது.

அஸ்வனி குமார்,சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருதை மும்பை, யூனியன் பேங்க் அணி வீரர் சாத்விக்.ஹெச்.ஆர். பெற்றார். 

மாலை 6.45 மணியளவில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ஹைதராபாத், ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் சென்னை, தமிழ்நாடு லெவன் அணியும் மோதின.

இப்போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

பிரியாஷ்  கவுடா,சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை, தமிழ்நாடு லெவன் அணி வீரர் எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

இரவு 8.15 மணியளவில் நடந்த 20வது லீக் போட்டியில் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் புபனேஸ்வர், நிஸ்வாஸ் அணியும் சந்தித்தன.

இப்போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

சுரேஷ் குமார்,முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர், நிஸ்வாஸ் அணி வீரர் சுதீப் மின்ஸ்க்கு வழங்கப்பட்டது

29 ந் தேதி நடக்கும் போட்டிகள் 

நாளை 29 ந் தேதி காலை 7 மணியளவில் நடைபெறும் 21வது லீக் போட்டியில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதுகின்றன.

மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 22வது லீக் போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் களம் காணுகின்றன.

மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 23வது லீக் போட்டியில் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதுகின்றன.

இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *