5 ம் நாள் ஆக்கிபோட்டி: ஓடிசாவை வென்ற போபால் அணி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் நடைபெற்று வரு
போட்டியின் 5 ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிசா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் தேவ்நோத் நன்வார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 19-வது நிமிடத்தில் போபால் அணி வீரர் கேரோபின் லக்ரா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
34-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் பிரதாப் டோப்போ பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 48-வது நிமிடத்தில் போபால்,அணி வீரர் அமந்தீப் லக்ரா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

50-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் ரோஹித் குல்லு பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 52-வது நிமிடத்தில் போபால் அணி வீரர் விஸ்வாஸ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இதன் மூலம் இரு அணியும் சம நிலைக்கு வந்தன,
அதை தொடர்ந்து ஆட்டம் சூடு பிடித்தது. அடுத்த கோல் போடுவது யார்? வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது, இந்த நிலையில் 55-வது நிமிடத்தில் போபால்,அணி வீரர் விஸ்வாஸ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இந்த கோல் அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இறுதியில் 4:3 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிரியாஸ் கவுடா மற்றும் பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரர் விருது போபால்ஸ் அணி வீரர் விஸ்வாசுக்கு வழங்கப்பட்டது.
இன்றைய மாலை போட்டிகள்
இன்று மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 18வது லீக் போட்டியில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும் மோதுகின்றன.
மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 19வது லீக் போட்டியில் ஹைதராபாத், ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் சென்னை, தமிழ்நாடு லெவன் அணியும் மோதுகின்றன.
இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 20வது லீக் போட்டியில் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் புபனேஸ்வர், நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.
