கோவில்பட்டியில் கோள்கள் திருவிழா; தொலைதூரபொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தில் கோள்கள் திருவிழா நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் குழந்தைகளுக்கு கோள்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது. டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்,ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு அதில் உளுந்தங்களி, கேப்பைரொட்டி,பயறுவகைகள்,சிறுதானிய உணவுகள்,உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார்,வட்டார கல்வி அலுவலர்கள் பத்மாவதி முத்தம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரதீப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்க மாநில தலைவர் உதயசங்கர்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம்,குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் ராணி விஜயா,ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி நிர்வாகி சுரேஷ்குமார்,உணவு ஆர்வலர் சுரேஷ்குமார், உள்பட பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டன.சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி மணிமொழிநங்கை நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை எழுத்தாளர் தங்கத்துரையரசி தொகுத்து வழங்கினார்,இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன்சாமுவேல். சிறார் இலக்கிய அமைப்பின் செயலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.







