கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி : 5வது லீக் ஆட்டத்தில் கர்நாடகத்தை வீழ்த்திய சென்னை அணி
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நேற்று முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான இன்று 25.5.2024 (சனிக்கிழமை) காலை நடைபெற்ற 5வது லீக் போட்டியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணியும், கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணி வீரர் ஹச்.எம்.அனந்த் பெனால்டி கார்னெர் முறையில் ஒரு கோல் போட்டார்.
37-வது நிமிடத்தில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
54-வது நிமிடத்தில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.
சுப்பையா தாஸ் மற்றும் முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ்க்கு சிறந்த ஆட்டக்காரர் விருது வழங்கப்பட்டது.
2,3,4 -வது லீக் ஆட்ட முடிவுகள்
நேற்று மாலை நடந்த 2வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் பேங்க் அணியுடன் ஒடிஷா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணி மோதியது.

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் பேங்க் அணி வெற்றி பெற்றது.
முனாவர் பாஷா மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது மும்பை யூனியன் பேங்க் அணி வீரர் சமீர் ஹபீஸ்க்கு வழங்கப்பட்டது.

3வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியுடன் சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின..இதில் 2:2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பாலாஜி குமார், சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணி வீரர் ராஜுக்கு வழங்கப்பட்டது.

4வது லீக் ஆட்டத்தில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் அணி மோதியது.
இதில் 4:1 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்றது
பிரியாஸ் கவுடா, அசுவினி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் பட்ராஸ்க்கு வழங்கப்பட்டது.
இன்று மாலை நடக்கும் போட்டிகள்
இன்று மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியுடன் சென்னை ஜி எஸ் டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி மோதுகின்றன.
மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 7வது லீக் போட்டியில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதுகின்றன
இரவு 8.15 மணியளவில் நடைபெறும் 8வது லீக் போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதுகின்றன.
நாளைய போட்டிகள்
நாளை 26.5.2024 அன்று நடைபெறும் போட்டிகளின் விபரம் :
காலை 7 மணியளவில் நடைபெறும் 9வது லீக் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியும் ஒடிஷா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதுகின்றன.
மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 10வது லீக் போட்டியில் மும்பை யூனியன் பேங்க் அணியும் போபால் நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.
மாலை 7 மணியளவில் நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் பேங்க் அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் அணியும் மோதுகின்றன.
மாலை 8.45 மணியளவில் நடைபெறும் 12வது லீக் போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன.







