• May 19, 2024

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் யார்?

 தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் யார்?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் விஜய். இவர் தற்போது கோட்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக  கூறப்படுகிறது. அடுத்த படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என்ற  தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது இடத்தை  நடிகர் அஜித் குமார் பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பட்டியலில் மூன்றாம் இடம்  கிடைத்துள்ளது. வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் ரூ. 140 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இதற்கு பிறகு ரூ. 120 கோடிக்கும் மேல் சம்பளத்துடன் 4வது இடத்தை பிடித்துள்ளார் கமல் ஹாசன். இதை தொடர்ந்து சூர்யா – ரூ. 60லட்சம்  சம்பளத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி, கார்த்தி – ரூ. 28 கோடி, சிம்பு – ரூ. 25 கோடி, விஷால் – ரூ. 25 கோடி வாங்கி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *