திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு ; மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கீடு
பிரபல நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு வந்தார்.
இந்த நிலையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை கமலஹாசன் சந்தித்து பேசினார். அப்போது 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை கமல்ஹாசன் அறிவித்தார்.
2025 நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மையத்துக்கு ஒரு சீட் அளிப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கமல்ஹாசன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்வார்கள்.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று சென்னையில் கையெழுத்தானது. இது மு க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.







