சாலை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி முதல் -அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் இன்று காலை கோவில்பட்டியில் நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கோவில்பட்டி வட்ட தலைவர் வெள்ளைச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மாரிமுத்து துணை செயலாளர் சௌந்தரராஜன்,பொருளாளர் ஆறுமுக உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் தங்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பும் வகையில் தபால் பெட்டியில் போட்டனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக கருதி சம்பளம் வழங்கிடுக.
• தர ஊதியத்தை 1900 ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளர்களாக அறிவித்துடுக.
• இறந்த சாலை பணியாளர் 300 க்கு மேற்பட்ட குடும்ப வாரிசு வேலை வழங்கிடுக.
• 7500 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிடு.
மேற்கண்ட கோரிக்கைகள் மனு வில் கூறப்பட்டிருந்தன







