புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திராநகர் சொர்னா நர்சிங் கல்லூரி கூட்டரங்கில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,புற்றுநோய் இல்லாத உலகத்தை படைத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திபிரியா தலைமை தாங்கினார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தியான் பவுண்டேஷன் மருத்துவ அலுவலர் சிவக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி புற்றுநோயும் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். தியான் பவுண்டேஷன் சஞ்சீவி,ஆசிரியர்கள் பாண்டிச்செல்வி,பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஆசிரியை லாவண்யா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.








