அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம்;பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள்
தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுகவின் 2வது ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து நாளை முதல் கருத்துக் கேட்க உள்ளோம்.
பயண திட்டத்தின் படி நாளை முதல் தொடங்குகிறது.( இன்று) சென்னை,வேலூர் மண்டலம், நாளை ( 6ம் தேதி) காலை விழுப்புரம் மண்டலம்,மாலை சேலம் மண்டலம்,7 ம் தேதி காலை தஞ்சை மண்டலம்,மாலை திருச்சி மண்டலம்,8 ம் தேதி மாலை திருநெல்வேலி மண்டலம்,9 ம் தேதி மதுரை மண்டலம்,10 ம் தேதி கோவை மண்டலம் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் நடைபெறும்.வெளிநாடு வாழ் தமிழர்களும் கூட தங்கள் கருத்துக்களை இமெயில் அல்லது கொரியர் மூலம் கழக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.அனைத்து பகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட குழு நேரில் சென்று கருத்துகளை கேட்டு பெறும்.மக்கள் கருத்துக்களை அந்தந்த மாவட்ட ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் நலமாக இருக்கும் என்பது எங்கள் கோரிக்கை.. மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இமெயில் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக்கொண்டிருக்கின்றன. சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.







