திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி; மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் தொடங்கிய கனிமொழி
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிதலைமையிலானா குழுவினர் இன்று தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.
இதன் முதல் கட்டமாக மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி வடக்கு – தெற்கு, விருதுநகர் வடக்கு – தெற்கு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று கூடினர். மகாலில் உரிமை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமனறத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்று குரிப்பிடப்பட்டிருந்த பேனர் தொங்கவிடப்பட்டு இருந்தது.
அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் , முன்னாள் எம்பி. ,டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், டாக்டர். எழிலன் நாகநாதன், . மார்க்கண்டேயன், . சண்முகையா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ,முன்னிலையில் கனிமொழி எம்.பி.,பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை கேட்டு குறிப்பெடுத்து கொண்டார்.