கோவில்பட்டி அறிவுசார் மையத்தில் இளைஞர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள்
கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ராமசாமிதாஸ் பூங்காவில் ரூ.2 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் புதிதாக அறிவுசார் மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று மாலை திறந்து வைத்தார். இதையொட்டி கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் கருணாநிதி, ஆணையாளர் கமலா, கவுன்சிலர்கள், பொறியாளர்கள் சனல்குமார் , சண்முகநாதன், நகரமைப்பு அதிகாரி சேதுராஜ், சுகாதார அலுவலர் ஆரியங்காவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அறிவுசார் மையமானது பொதுமக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்ற விவரம் வருமாறு:-


* பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் அறிவு திறனையும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வண்ணம் அனைத்து வகையான தலைப்பிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
* மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* குழந்தைகளின் திறனை மேம்படுத்த தனியாக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
* சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உரிய வசதிகளுடன் படிக்கும் வண்ணம் மேஜை , நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
* பொதுபிரிவு , இளைஞர்கள் பிரிவு என புத்த்தகங்கள் படிப்பதற்கு தனித்தனியே பகுதிகள் உள்ளன.
* மின்சாரம் தடைபடும்போது ஜெனரேட்டர் வசதியுடன் தடைபடாத மின்விநியோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.







