கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை
கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் சு,சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி , சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 5.1.2024 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு இந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பொது மக்களின் ஆதார் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நீடிக்கப்பட்டுள்ளது. . பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.’ இவ்வாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.சுரேஷ் தெரிவித்துள்ளார்