கோவில்பட்டியில் பல்லாங்குழி சாலைகள்; சீரமைக்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டியில் பல்லாங்குழி சாலைகள்; சீரமைக்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகரில் கன ,மழைக்கு பிறகு அரிப்பு ஏற்பட்டு பல்லாங்குழி சாலைகளாக மாறிவிட்டன. கோவில்பட்டி நகரில் பருவக்குடி, வேம்பார் செல்லும் சாலை (மாதாங்கோவில் ரோடு) குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. மேலும் கோவில்பட்டி நகரில் இந்த சாலை மிக முக்கிய சாலையாக விளங்குகிறது காரணம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள், வர்த்தகம் என மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை விபத்து ஏற்படும் வகையில் அபாயகரமாக தரமற்ற முறையில் பாராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது

கோவில்பட்டியில் இருந்து நான்குவழி சாலையை அடையும் இளையரசநேந்தல் ரோடு படு மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் படும் கஷ்டம் மிகவும் அதிகம். பகல் நேரத்தில் ஒருவழியாக சென்றுவிடலாம். இரவு நேரத்தில் இந்த சாலையில் மின்விளக்கு வசதி குறைவு . இதனால் இருளில் பள்ளம் தெரியாமல் நாள்தோறும் இருசக்கரவாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையை நாடி செல்வது அதிகரித்து வருகிறது.

இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதுடன் ஆக்கிரமிப்புகளையும்  அகற்றி மழைநீர் வடிகால் அமைத்து தரமான சாலை அமைத்து தரக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் எதிரில் தேவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி நகர பா.ஜனதா கட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், பொதுசெயலாளர் வேல்ராஜா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *