தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதிப்பு: 1000 பேருக்கு நிவாரண பொருட்களை நடிகர் பிரசாந்த் வழங்கினார்
![தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதிப்பு: 1000 பேருக்கு நிவாரண பொருட்களை நடிகர் பிரசாந்த் வழங்கினார்](https://tn96news.com/wp-content/uploads/2024/01/f279d1ba-7840-4ae9-9a17-978a7031a280-850x560.jpeg)
தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கன மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடியில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது
1௦௦௦ பேருக்கு அரிசி, உடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை நடிகர் பிரசாந்த் வழங்கினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரசாந்த் கூறியதாவது:-
மழைவெள்ளத்தால் பாதிக்ககப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிசெய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை அளித்து இருக்கிறார்.
இதே போன்று எல்லோரும் உதவி செய்வார்கள் இந்த மழைவெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு. அடுத்து பாதிப்பு .ஏற்படாமல் இருக்க குளம், கனமாய் போன்ற நீர்நிலைகளை தூர் வாரவேண்டும். ஒவ்வொரு பேரிடர் காலத்திலும் நாம் பாடம் கற்றுக்கொண்டு வருகிறோம். இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்..
இவ்வாறு நடிகர் பிரசாந்த் பேசினார்.
நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட பெண்கள் பலர் பிரசாந்துடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர், உடனே அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி பிரசாந்த் செல்பி எடுத்துகொண்டார்.
நிவாரண பொருட்கள் பெற்றவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பிரதிப், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சீனி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமலதாஸ் செய்திருந்தார்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த நடிகர் பிரசாந்த் தனியார் விடுதியில் தங்கி ரசிகர்களை சந்தித்து பேசினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)