தூத்துக்குடியில், விஸ்வநாத தாஸ் நினைவிடம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் (இணைப்பு) சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் டென்சிங் தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர போராட்ட வீரர் சிஐடியூ மேற்பார்வை தலைவர் பாசுதேவ் ஆச்சாரிய்யா, சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கும், பாலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியான பாலஸ்தீனர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தொடக்க உரையாற்றினார். தொழிற்சங்க சட்ட திருத்தம் பற்றியும் இன்றைய அரசின் சூழ்நிலை பற்றியும் விளக்கி கூறினார். கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி, கருணாமூர்த்தி, கவுரவ தலைவர் சதாசிவம், ஏரல் கார்திகேயன், திருமணிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*முடிதிருத்தும் தொழிலாளருக்கு வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் வீடுகள் கொடுக்க வேண்டும்.
*, முடிதிருத்தும் நிலையங்களுக்கு மானிய விலை மின்சாரம் வழங்க வேண்டும்.
* முடிதிருத்தும் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் நலவாரியத்தில் இருந்து வழங்க வேண்டும்
* திருமண நிதி ரூ.20000, பென்சன் ரூ.3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
* மானிய கடன் வழங்க வேண்டும்
*,தூத்துக்குடியில், சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் நினைவிடம் அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.







