ஜி.வி.மார்கண்டேயன் ஆய்வு: பழுதடைந்த ஆற்றுப்பாலத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் ஆற்றுப்பாலம் பழுதாகி உள்ளது என்று கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயனை இன்று காலை 8 மணிக்கு நேரில் சந்தித்து பாலத்தை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்டதும் உடனடியாக ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. காலை 11-மணியளவில் பாலத்தை நேரில் சென்று கிராம மக்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழை தண்ணீர் ஆற்றுப்பாலத்தின் மேல் ஓடியதை கண்டார்.
இதை தொடர்ந்து பாலத்தை உடனடியாக சரி செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஜி.வி.மார்கண்டேயனுடன் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் காசிவிஸ்வநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஹரிபாலகிருஷ்ணன், கிளை செயலாளர் மூக்கையா உள்பட பலர் உடன் சென்று இருந்தனர்.







