சிகரெட் லைட்டர் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு
கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் லட்சுமணன், ஆதித்யா மேட்ச் சேம்பா் தலைவா் விஜய்ஆனந்த், தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தைச் சோ்ந்த நூா்முகமது நாகராஜன் ஆகியோர் மதுரையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
அவர்களுடன், பா.ஜ..க மாநிலப் பொதுச்செயலா் பேராசிரியா் ராமசீனிவாசன் உடன் சென்று இருந்தார். இந்த சந்திப்பின்போது மத்திய நிதி மந்திரி நிாமலா சீதாராமனிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது.=அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
இந்தியாவில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும. அத்தகைய லைட்டா்கள் இறக்குமதிக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
மேலும் தீப்பெட்டித் தொழிலாளா்கள்- உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,







