கம்ம இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினர் சான்று வழங்க வேண்டும்; கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக மண்டல செயல் தலைவா் ஆர்..செல்வராஜ் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் தீர்க்கும் முகாமில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம், ,கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசாணை எண் 2 மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் 7.1 21 ன் படி தெலுங்கு மொழி பேசும் கம்ம இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மை கல்லூரிகளில் கல்வி சலுகை பெறும் வகையில் மொழிவாரி சிறுபாண்மையினர் என்று வருவாய் துறையினரால் சான்று வழங்கப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது
ஆனால் கம்ம இன மக்கள் மொழிவாரி சிறுபான்மையினர் என்ற சான்று பெறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கல்வி சலுகை பெறுவதில் முன்னுரிமை பெற முடியாத நிலை உள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட சட்ட ஆணையின்படி சான்று வழங்கிட வருவாய் நிர்வாக மற்றும் மேலாண்மை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
.இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல பொருளாளா் பி .கோபாலகிருஷ்ணன் , உப தலைவா்கள் எஸ். எம். ராமசந்திரன் , எஸ்.குமாா் , மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெகன்மோகன் , மாநில பிரதிநிதி டி .வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினா்கள் ஏ .கனகராஜ் , பி.சீனிவாசகம் , எல்..குமாா் , எஸ். எம். சீனிவாசன் , வேலுச்சாமி , கே..வெங்கட்ராமன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனர்.
.
,.







