சென்னை – நெல்லை, திருச்செந்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள்

வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்பு ரெயில் எழும்பூரில் 17.11.23 இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.55 க்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் நாளை மதியம் 12.45 க்கு நெல்லையை சென்றடையும்.
வண்டி எண் 06002 திருச்செந்தூர் – தாம்பரம் சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் 18.11.23 நாளை சனிக்கிழமை இரவு 10.10 -க்கு புறப்பட்டு நெல்லைக்கு 11.45 க்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்செந்தூர் – தாம்பரம் சிறப்பு ரெயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
