கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் சிலைக்கு ஆட்சியர் மரியாதை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள லட்சுமிபதி முதன் முறையாக இன்று கோவில்பட்டிக்கு வருகை தந்தார். கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. நினைவரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கோவில்பட்டி தாசில்தார் லெனின் உடனிருந்தார்.







