நவராத்திரி விழா: சரஸ்வதி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்
![நவராத்திரி விழா: சரஸ்வதி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/69d76b2c-7c30-469c-9e79-d85497bb4c46-850x560.jpeg)
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்றது. தினமும் காலை வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை கடைசி 3 நாட்கள் சரஸ்வதிபூஜை நடைபெற்றது. நவராத்திரி நிறைவு நாளான இன்று நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் முத்துமாரியம்மன் சரஸ்வதி கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் சுண்டல் வழங்கப்பட்டது. பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)