பனை தொழிலில் பார்வையற்ற முதியவர்; அண்ணாமலை வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த பொன்பாண்டி என்ற பார்வை திறனற்ற முதியவர் பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்,
இவருக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை தெரியாது. இருந்தும் அதை குறையாக கொள்ளாமல் 50 ஆண்டுகளாக இந்த பனை தொழிலை செய்து வருகிறார். தனி ஒரு ஆளாக யாருடைய உதவியும் இன்று தினமும் 20 லிருந்து 30 பனை மரங்களில் ஏறி இறங்குகிறார்.
பதநீர் இறக்குவது, கருப்பட்டி தயார் செய்வது, ஓலை விற்பனை செய்வது என தனது வாழ்வாதாரத்திற்காக செயல்பட்டு வருகிறார். யாருடைய உதவியும் இன்றி தனி மனிதராக பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அறியப்படாத அதிசய மனிதர்கள் பட்டியலில் பொன்பாண்டி பற்றி குறிப்பிட்டுள்ள பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, “பொன்பாண்டியின் கடின உழைப்பு போற்றுதலுக்குரியது என்பதை தெரிவிப்பதோடு ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.